
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று காலை பக்தர்களிடம் செல்போன் திருடியதாக, முருகானந்தம் 37 வயதான நபரை கோயில் பாதுகாப்புப் பணியிலிருந்த ஊழியர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். விசாரணையில் அந்த நபர் அரியலூர் மாவட்டம், ஓரியூர் பகுதியைச் சேர்ந்த என்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து முருகானந்தத்தை சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ள கைதிகள் அறையில் அடைத்து காவல்துறை விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கழிப்பறைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்ற முருகானந்தம், கழிப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தன்னுடைய அரைஞாண் கயிற்றின் மூலம், கழிப்பறையின் பக்கவாட்டு ஜன்னலில் முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக, காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. செல்போன் திருடியதாக காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட முருகானந்தத்திடமிருந்து எந்தப் பொருளும் கைப்பற்றப்பட்டவில்லை எனச் தெரிவித்துள்ளார். அதுபோக காலை 7 மணிக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட முருகானந்தம்மீது, அவர் தற்கொலை செய்துகொள்ளும் வரை எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை என்கின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலர்தான் முருகானந்தத்தை அழைத்து வந்ததாகச் சொல்கின்றனர். காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்ததையடுத்து, திருச்சி எஸ்.பி சுஜித்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் காவல் நிலையத்தில் முருகன் என்ற விசாரணைக் கைதியை காவல்துறையினர் அடித்துக் கொன்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படியிருக்க, தற்போது விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் தமிழகத்தில் ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் வீடுகள் கடைகளில் பெட்ரோல் குண்டு வீழ்ச்சி போன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமயபுரம் காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.