அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டி சர்ச்சையை கிளப்பும் சீனா.!

பீஜிங்: இந்திய நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை ‘தெற்கு திபெத்’ என சீனா அழைத்து வருகிறது. சீன படைகள் இங்கு அவ்வப்போது அத்துமீறுவதும் வழக்கம். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள, 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான மாவோ நிங் இன்று ஏப்ரல் 05 நிருபர்கள் சந்திப்பில், ‘ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி. அதனால் தான் சீன அரசின் தொடர்புடைய செயல் அதிகாரிகள் சில பகுதிகளுக்கு பெயர்களை மாற்றி தர வரிசைப்படுத்தி உள்ளனர். மாநில கவுன்சிலின் புவியியல் பெயர்களுக்கான நிர்வாகத்தினரின் தொடர்புடைய நிபந்தனைக்கு உட்பட்டு பெயர் மாற்றப்பட்டுள்ளது. அது சீனாவின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட்டது’ எனக் கூறினார்.அருணாச்சல் விவகாரத்தில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் சீனா மீண்டும் உரிமை உள்ளது என பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனிடையே, சீனாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா தன்னிச்சையாக உரிமை கோருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *