
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழாமாலை 3 மணிக்கு நடைபெறும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தன. அமைச்சர் முன்கூட்டியே வந்த நிலையில் விழாவை தொடங்க உத்தரவிட்டார். சரியாக 3 மணிக்கு வந்த எம்.பி.நவாஷ்கனி எம்பி அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டன. அமைச்சரின் ஆதரவாளர்கள் கூச்சல் போடவே எம்.பி விழாவிலிருந்து வெளி நடப்பு செய்தார். விளையாட்டுவீரர்களுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது ராமநாதபுரம் தொகுதியில் திமுக போட்டியிடும் எனவும் சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக அமைச்சர் எம்.பிஇடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் மாவட்ட ஆட்சியர் அவர்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஓரமாக தள்ளிவிடப்படடார். இச்சம்பவம் குறி்தது மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் புகார் அளித்துள்ளார்.
மேலும் அரசு விழாவில் அமைச்சர் மற்றும் எம்பி இடையே நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் மக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.