
திருச்சி: அரசு மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜஹான் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க பட்டது.இவ்மனுவில் கூறியிருப்பதாவது.
அரசு நிர்ணயித்த மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க நிறைய சிரமம் மேற் கொள்ள வேண்டி உள்ளது. மருத்துவ காப்பீடு அட்டை எளிதாக அணைத்து இ. சேவை மையங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ மனைகளில் அவசர பிரிவுகளில் நோயாளிகளை சேர்த்து விட்டு காப்பீடு திட்டத்திற்கு மிகவும் சிரமம் மேற் கொண்டு பொது மக்கள் அலைக்கழிக்க படுகிறார்கள் . இதனை சரி செய்து தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற உதவிகள் செய்திட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல் பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம் என்று இவ்மனுவில் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா. மாவட்ட செயலாளர் நத்தர் ஒளி. மாவட்ட பொருளாளர் சலீம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் அப்பாஸ் மாவட்ட துனை செயலாளர் கே. ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.