
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்எடப்பாடி கே பழனிசாமியின் அறையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.தமிழக சட்டப் பேரவை இன்று(வெள்ளிக்கிழமை) கூடுகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் இரண்டாவது ஆண்டாக தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.