
அதிமுக தேய்ந்தாலும் சிதைந்தாலும் அந்த இடத்திற்கு பாஜக வர முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிபெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து திமுக தலைவரும் தமிழகமுதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்க விசிக வெற்றிவேட்பாளர்களுடன் அண்ணா அறிவாலயத்திற்கு விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் வருகை தந்தார்.

முதலமைச்சர் சந்திப்புக்கு பிறது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பெருவாரியான நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என தொடர்ச்சியாக கூறி வந்தேன் அது இன்று மெய்ப்பிக்கப் பட்டு இருக்கிறது . பெருவாரியான நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என தொடர்ச்சியாக கூறி வந்தேன் அது இன்று மெய்ப்பிக்கப் பட்டு இருக்கிறது . கடந்த 8 மாத கால திமுக அரசின் நன் மதிப்பிற்கும், திமுக தலைமையிலான கூட்டணியின் நம்பகத்தன்மைக்கும் மக்கள் அளித்திருக்கும் மாபெரும் பரிசு இந்த வெற்றி. கடந்த 8 மாத கால திமுக அரசின் நன் மதிப்பிற்கும், திமுக தலைமையிலான கூட்டணியின் நம்பகத்தன்மைக்கும் மக்கள் அளித்திருக்கும் மாபெரும் பரிசு இந்த வெற்றி என தெரிவித்தார்.மேலும் , கூட்டணி காட்சிகளை ஸ்வாகா செய்யும் கட்சி தான் பாஜக , ஆகவே தமிழகத்தில்அதிமுகவியும், பாமகயும் தேய்மானம் செய்யக்கூடிய, சிதைக்க கூடிய வேலையை பாஜகசெய்யும், ஆனால் உடனடியாக அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளிவிடமுடியாது இரண்டாமிடத்திற்கு பாஜகவால் வர முடியாது எனத் தெரிவித்தார்.

சின்னம் இல்லாத கட்சிகள் பாஜகவை சீண்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைபேசியிருந்தது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, கொள்கை இல்லாதவர்கள் பேசுகிறார்கள் தங்களுக்கு சின்னம்தான் இல்லை கொள்கை இருக்கிறது என திருமாவளவன் பதிலளித்தார்.