அதிபராக தேர்வான ரணிலுக்கு எதிர்ப்பு: இலங்கையில் மீண்டும் போராட்டத்தில் மக்கள்.!

இலங்கை அதிபராக தேர்வான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரரும் அதிபராகவும் இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை பார்லிமென்டில் இன்று நடந்தது. இதில் ரணில் விக்கிரமசிங்கே, வெற்றிப்பெற்று, இலங்கையின் 8வது அதிபராக தேர்வானார்.

ரணில் விக்கிரமசிங்கே 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அதிபராக தொடர்ந்து செயல்படுவார். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *