
சென்னை:சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு ‘ஆருத்ரா கோல்டு’ என்ற நிதி நிறுவனம் செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் இதற்கு கிளைகள் உள்ளன.கவர்ச்சிகர விளம்பரம்இந்த நிறுவனம் தங்க நகைகள் மீது கடன் மற்றும் பொதுமக்களிடம் முதலீட்டு தொகையும் வசூலித்து வந்ததாக தெரிகிறது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சியாக அறிவிப்பு வெளியிட்டதால், இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடாக கொட்டியதாகவும், இந்த அளவுக்கு வட்டி கொடுக்க முடியாது என்றும், இதில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புகார்கள் வந்தன.மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முறையாக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறப்பட்டதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.26 இடங்களில் சோதனைஇதனால் இந்த நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பூர்வாங்க விசாரணைக்கு பிறகு நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீரென்று நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அதன் கிளைகளிலும் சோதனை நடத்தினார்கள்.26 இடங்களில் நேற்று காலை தொடங்கி மாலை வரை இந்த சோதனை நீடித்தது.செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை கடலூர் காட்டுமன்னார்கோவில் ராணிப்பேட்டை போன்ற தமிழகம் முழுவதும் 26 இடங்களில் சோதனை நடைபெற்றது.