அடுத்தடுத்து ரயில் விபத்துகள்! நேற்று சென்னை.. இன்று மதுரையில்! தடம் புரண்ட ரயிலால் தவித்த பயணிகள்.!

மதுரை : மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டதன் மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் காலதாமதமாக புறப்பட்டது.நேற்று சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.ரயில் நிறுத்துமிடம் அருகே வந்த போது ரயிலில் இருந்த லோகோ பைலர் அதனை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த ரயிலின் ஓட்டுநர் சங்கர் என்பவர் அதிலிருந்து குதித்து உயிர்தப்பிய நிலையில், வேகமாக சென்ற ரயில், பல தடுப்புகளை இடித்து தகர்த்துக் கொண்டு நடைமேடையில் மோதி நின்றது. இந்த விபத்தில் அந்த ரயில் என்ஜினுடன் இணைந்த முதல் பெட்டி சேதமடைந்த நிலையில், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாலும், ரயிலில் பயணிகள் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டதன் மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் காலதாமதமாக புறப்பட்டது. டிராக்டர்கள் போக்குவரத்திற்கு பயன்படும் சரக்கு ரயில் கூடல் நகரில் இருந்து மதுரைக்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலின் கடைசி சரக்குபெட்டியின் ஒரு சக்கரம் மதுரை செல்லூர் அருகே ரயில் பாதையை விட்டு இறங்கியது. இதனால் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்ற குருவாயூர் சென்னை வரை வரையில் மதுரை பாலம் பகுதியில் நிறுத்தப்பட்டது.பின்பு அந்த ரயில் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே குருவாயூர் சென்னை விரைவு ரயில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு மேல் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடம்புரண்ட ரயில் பெட்டியை சீர் செய்வதற்காக அடுத்த இரட்டை ரயில் பாதையில் குருவாயூர் ரயில் மதுரைக்கு பின்புறமாக வந்த பிறகு விபத்து சீரமைப்பு ரயில் விபத்து நடந்த இடத்திற்கு மதியம் 02.11 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது. சீரமைப்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு ரயில் தற்போது சமயநல்லூரில் நிறுத்தப்பட இருக்கிறது. விபத்து சீரமைப்புக்கு வசதியாக பாதிக்கப்பட்ட சரக்கு பெட்டியும் மற்றும் இரண்டு பெட்டிகளும் தவிர மற்ற சரக்கு பெட்டிகள் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டன. மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சிறிது கால தாமதமாக புறப்பட்டது. மேலும் தடம் புரண்ட சரக்கு ரயிலை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *