
கள்ளக்குறிச்சி:
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த உ.செல்லூர் கிராமத்தில் வசிக்கும் வெற்றிவேல் மனைவி வசந்தி அவர்கள் மகேந்திரா ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் வாங்கியுள்ளனர் இந்தநிலையில் 24/4/2022 ஆம் தேதி காலை 11 மணி அளவில்

வீட்டிலிருந்த வசந்தியிடம் மகேந்திரா பைனான்ஸ்யில் வேலை பார்க்கும் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நெய்வானை கிராமத்தைச் சேர்ந்த பாரதி மற்றும் சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து கடன் கொடுக்கக் கூடிய வசந்தி அவர்களை தகாத வார்த்தையில் திட்டிய உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் இதனை அறிந்த இந்திய குடியரசு கட்சியின் மாவட்டச் செயலாளர் இருவேல்பட்டு குமார் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்பூவை.ஆறுமுகம் வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி மேலும்

மகேந்திரா பைனான்ஸ்சில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ரவுடி கும்பலை உடனடியாக கைது செய்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி வசந்தி அவர்களுக்கு மானநஷ்ட வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.

மேலும் இது போன்ற பல தனியார் நிறுவனங்கள் தவறாக ரவுடி கும்பலை வைத்து மிரட்டுவதை பகுஜன் சமாஜ் கட்சி இந்திய குடியரசு கட்சி புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டித்துள்ளனர்.