ஃபேஸ்புக் காதலி இறந்ததால் சோகம் தாங்க முடியாமல் பூச்சி மருந்தை குடித்து காதலன் மரணம்.!

ரிஷிவந்தியம் மேலத்தேனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (26), ஃபேஸ்புக் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பல நாட்களாக நட்புறவில் இருந்து வந்திருக்கிறார்.காலப்போக்கில் இருவரும் காதல் வயப்பட்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில், திடீரென மணிகண்டனிடம் பூமிகா பேசாமல் இருந்திருக்கிறார். இதனால் தவித்துப்போன மணிகண்டன் பூமிகாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அவரது பாட்டி எடுத்து பேசியிருக்கிறார்.அப்போது, இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த பூமிகா அண்மையில் இறந்துவிட்டதாக பாட்டி கூறியதும் செய்வதறியாது மணிகண்டன் நிலைக்குலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேரில் கூட பார்த்திராத காதலி இதய நோயால் இறந்ததை அடுத்து சோகம் தாளாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்திருக்கிறார்.இதனால் மயங்கிய மணிகண்டனை குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். காதல் கோட்டை பட பாணியில் பார்க்கமலேயே காதலித்து வந்த நிலையில் பூமிகாவின் பிரிவை தாங்க முடியாமல் மணிகண்டனும் தற்கொலை செய்த நிகழ்வு அவரது சுற்றத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *